பராமரிப்பு பணிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், இன்று முதல், அதாவது அக்டோபர் 29 முதல் வழக்கம்போல் இந்த ரயில் சேவை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கடற்கரை ரயில் நிலையம் முதல் வேளச்சேரி செல்லும் ரயில் பாதையில் பராமரிப்பு பணி காரணமாக, ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து மாற்றுப் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தற்போது பராமரிப்பு பணிகள் முடிவடைந்ததால், இன்று முதல் வழக்கம்போல் சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் சேவை மீண்டும் தொடங்குகிறது. இன்று அதிகாலை 4:53 மணிக்கு முதல் ரயில் புறப்பட்டது, மேலும் கடைசி ரயில் நள்ளிரவு 11.13 மணி வரை இயங்கும்.
எனினும், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையே இயங்கும் ரயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் மட்டும் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்."