ஊரடங்கு முடிய உள்ள நிலையில் சென்னையில் குறைந்த அளவிலான பயணிகளை கொண்டு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு நடவடிக்கை மே 17 உடன் நிறைவடைய இருக்கிறது. ஊரடங்கிறகு பிறகு போக்குவரத்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்துத்துறை பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி சென்னை உள்ளூர் போக்குவரத்து பேருந்துகளில் 20 பேர் அமர்ந்து செல்லவும், 5 பேர் நின்று செல்லவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் மட்டுமே செல்ல முடியும். இதுதவிர பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இதுத்தவிர சென்னை மின்சார ரயில்களிலும் பெட்டிக்கு 50 நபர்களை அனுமதிக்கவும், மெட்ரோ ரயில்களில் 160 பேர் வரை அனுமதிக்கவும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.