தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னையில் 45 பறக்கும் படைகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பிப்ரவரி 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடா உள்ளிட்டவற்றை தடுக்க பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 200 வார்டுகளை கொண்ட சென்னை மாநகராட்சியில் 45 பறக்கும் படைகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்போது வீடியோ எடுக்கப்படுவதுடன், வியாபாரிகளிடம் பணம் பறிமுதல் செய்தால் உரிய ஆவணம் தந்த பிறகு பணம் திருப்பி தரப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.