சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிடம் ஒன்று கட்டியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இதுகுறித்து நீதிமன்றத்தில் மாநகராட்சியின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக சென்னை அண்ணா நகர் டவர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை காலி செய்யும்படி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் இந்த நோட்டீசை எதிர்த்து கிளப் நிர்வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது
இதனையடுத்து அண்ணா நகர் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் கட்டிடம் விரைவில் அகற்றப்படும் என தெரிகிறது