விலை மலிவான இன்டோமெதசின் என்ற மருந்து கொரோனாவை விரைந்து குணப்படுத்துவதாக தெரிவந்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்களுக்கு சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் சென்னை ஐஐடி மருத்துவ குழுவின் ஆய்வு முடிவில் விலை மலிவான இன்டோமெதசின் என்ற மருந்து கொரோனாவை விரைந்து குணப்படுத்துவதாக தெரிவந்துள்ளது. இந்த மருந்தை எடுத்து கொண்ட கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை உருவாகவில்லை என்றும் 4 நாட்களில் அனைத்து அறிகுறிகளில் இருந்து விடுபடுகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.