சென்னையின் வரப்பிரசாதங்களில் ஒன்று மெட்ரோ ரயில். குறிப்பாக அண்ணா சாலையில் பேருந்தில் சென்றால் ஒரு மணி நேரம் ஆகும் பகுதிக்கு மெட்ரோ ரயிலில் சென்றால் கால்மணி நேரத்தில் அதிலும் குளுகுளு ஏசியில் செல்லலாம். கட்டணம் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இந்த மெட்ரோ ரயில் சேவை
இருப்பினும் அவ்வப்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை தடைபடுவது பயணிகளை அவதிக்குள்ளாக்குகிறது. சமீபத்தில் ஏற்பட்ட மின்கோளாறால் விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஆயிரம் விளக்கு-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் உயர் மின்னழுத்த கம்பியில் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை வரை ஒரு வழித்தடத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருவதாகவும், இதனால் ரயில்கள் தாமதமாக வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இருப்பினும் மின்கோளாறு சரிசெய்யப்பட்டு வருவதால் இன்னும் சிலமணி நேரங்களில் ஆயிரம் விளக்கு-வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் இருவழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது