Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

தெளிவில்லா சிசிடிவி காட்சிகள்; தெளிவாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு! – காவல்துறை அறிவிப்பு!

தெளிவில்லா சிசிடிவி காட்சிகள்; தெளிவாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு! – காவல்துறை அறிவிப்பு!
, சனி, 26 நவம்பர் 2022 (10:46 IST)
சென்னையில் காவல்துறையினர் வைத்துள்ள சிசிடிவி காட்சிகளின் தெளிவில்லா காட்சிகளை தெளிப்படுத்தி காட்டும் வகையில் மென்பொருளை உருவாக்கி தந்தால் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் குற்ற செயல்களை விரைந்து கண்டுபிடிக்கவும், குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும் 2 லட்சத்திற்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகமான சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ள நகரங்களில் சென்னை மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்நிலையில் சிசிடிவியில் பதிவாகும் சில காட்சிகள் தெளிவற்று இருப்பதால் குற்ற சம்பவங்களை கண்டறிவதில் சிக்கல் உண்டாகிறது. இதனை சரிசெய்யும் வகையில் சைபர் ஹேக்கத்தான் என்ற போட்டியை சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

இந்த போட்டியில் கலந்து கொள்வோருக்கு தெளிவற்ற சிசிடிவி புகைப்படங்கள், காட்சிகள் வழங்கப்படும். அதை மென்பொறியாளர்கள் தங்கள் மென்பொருளை பயன்படுத்தி தெளிவாக்கி காட்ட வேண்டும். மிகச்சரியாக தெளிவுப்படுத்தும் மென்பொருளை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசாக வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏஜென்ட் கண்ணாயிரம் - சினிமா விமர்சனம்