அடுத்த 3 மணி நேரத்தில் சென்னையில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு தோன்றியது அது பின்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வாக மாறியது என்பது தெரிந்ததே. இந்நிலையில் தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் நிலை கொண்டு இருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
தற்போது நிலவரப்படி வங்கக் கடலில் வலுப்பெற்றுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மதியம் தெற்கு நோக்கி நகர்ந்து சென்று வலுவிழக்க தொடங்கும். பின்னர் அது மாமல்லபுரம் - ஸ்ரீ ஹரிகோட்டா இடையே அதாவது சென்னை அருகே மேற்கு நோக்கி நகர்ந்து கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்தில் கன முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் செங்கல்பட்டு, திருவள்ளூர், மாவட்டங்களில் தொடந்து மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை முழுவதும் பரவலாக 7 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது என்பது கூடுதல் தகவல்.