சென்னை அடையார், இந்திரா நகர் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும், இன்று முதல் ஒருவார காலத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்றும், மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடையார் - இந்திரா நகர் பகுதியில் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1. MG சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாக OMR நோக்கி வரும் வாகனங்கள் தடைசெய்யப்பட்டு, 2 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, 21 ஆவது குறுக்குத் தெரு, இந்திரா நகர் 3 ஆவது அவென்யூ வழியாக செல்லலாம்
2. கலாக்ஷேத்ராவிலிருந்து OMR நோக்கி செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கும். KBN-லிருந்து OMR நோக்கி வரும் வாகனங்களும் வழக்கம் போல் செல்லும்.
3. OMR-லிருந்து 2 ஆவது அவென்யூ வழியாக LB சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த வழியாக சென்ற வாகனங்கள் இனி 2 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, இந்திரா நகர் 1வது பிரதான சாலை வழியாக செல்ல வேண்டும்
4. அதேபோல் கலாக்ஷேத்ராவிலிருந்து இந்திரா நகர் 3 ஆவது அவென்யூ வழியாக எல்பி ரோடு நோக்கி வரும் வாகனங்கள் இந்திரா நகர் 4 ஆவது அவென்யூ, 3 ஆவது பிரதான சாலை, இந்திரா நகர் 2 ஆவது அவென்யூ வழியாக செல்ல வேண்டும்
5.OMR மற்றும் கலாக்ஷேத்ராவிலிருந்து KBN சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம்போல் செல்லலாம்.
வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு ஒத்துழைக்குமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.