வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள புல்புல் புயல் வலுப்பெற்றுள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்காள விரிகுடாவில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உண்டானது. பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடைந்த அது புயலாக தீவிரமடைந்தது. அதற்கு புல்புல் என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புல்புல் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்றாலும், கடல்பகுதியில் 130 முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. இந்த புயல் மேலும் வலுவடைந்து வருவதால் நவம்பர் 11ம் தேதி வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.