கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பார்வையிடச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை சாப்பிட்டு சரிபார்த்தார்.
கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சீரழிந்து போயுள்ளன. அந்த மாவட்ட விவசாயிகள் கிட்டதட்ட 10 வருடங்கள் பின்னோக்கி தள்ளப்பட்டுள்ளனர். 21,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. லட்சக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பல்வேறு இடங்களிலிருந்து மக்களுக்கு நிவாரண உதவிகள் அனுப்பப்பட்டு வருகிறது. மின் கம்பங்களை சீர் செய்ய மின் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது முகாம் ஒன்றிற்கு சென்ற முதலமைச்சர் அங்கு மக்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு தரம்பார்த்தார். மக்களுக்கு தரமான உணவை வழங்கும்படி அங்கிருந்தவர்களிடம் கூறிவிட்டு சென்றார்.