Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துபாய் தீ விபத்து" ; முதல்வர் முக.ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

MK Stalin
, திங்கள், 17 ஏப்ரல் 2023 (14:58 IST)
துபாயில் ஏற்பட்ட விபத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரகம்  நாட்டில்  துபாயில் பழமையான பகுதி பிரிஜ்முரார்.   இங்குள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் 4வது தளத்தில் இன்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், இந்தியவர்கள் உள்பட 16 பேர் பலியாகினர். அவர்களின் 2 பேர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ராமராஜ புரத்தைச் சேர்ந்த குடு சாலிய கூண்டு(49), இமாம் காசில் அப்துல் காதர்.

இந்த நிலலையில், துபாயில் ஏற்பட்ட விபத்து முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு இரங்கல்  மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதல்வர் முக, ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’துபாய் நாட்டில் டேரா என்ற இடத்தில் தங்கி பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ராமராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த திரு.இமாம் காசீம், த/பெ.அப்துல் காதர் (வயது 43) மற்றும் அதேபகுதியைச் சேர்ந்த திரு.குடு (எ) முகமது ரபிக், த/பெ.சலியாகுண்டு (வயது 49) ஆகிய இருவரும் 15.4.2023 அன்று அவர்கள்தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தனர் என்றதுயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

விரைவில் தமிழ்நாட்டிற்கு உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டுவருவதற்கு இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு. செஞ்சி கே.எஸ். மஸ்தான் அவர்களை இப்பணியில் துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும். ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாகத்’’ தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி: 16 ஆண்டுக்கு பின் நடப்பதாக அமைச்சர் உதயநிதி அறிவிப்பு..!