சென்னையில் பள்ளிகளைச் சுற்றி புகைப்பது அதிகரித்திருப்பதால் குழந்தைகள் பாதிக்கப்பட்டுவருவதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தர்மபுரி எம்பியும், பாமக தலைவருமான அன்புமணி ராமதஸ் தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
''சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது பெரும் கவலையளிக்கிறது! ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத் தான் நான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது, பல்வேறு தடைகளைத் தகர்த்து பொது இடங்களில் புகைக்க தடை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றினேன்'' என்று தெரிவித்துள்ளார்.