வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் முறையான உரிமம் பெறாத 15000 உணவகங்கள், தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் விடுதிகள் மூடப்படும் என உணவு பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பல்லாயிரக்கணக்கான தள்ளுவண்டி உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இதுபோன்ற உணவகங்களில் குறைந்த விலையில் உணவு கிடைப்பதால், பலதரப்பட்ட மக்கள் தள்ளுவண்டிக் கடைகளையே நாடி செல்கின்றனர். பெரும்பாலான தள்ளுவண்டிக் கடைகளில், கிடைக்கும் உணவுதான் விலை குறைவே தவிர, அதை உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகளோ பெரிது. பல தள்ளுவண்டிக் கடையில் தயாரிக்கப்படும் உணவுகள் சுகாதாரமாக இருப்பதில்லை, மேலும் இதுபோன்ற உணவகங்கள் வெட்டைவெளியில் இருப்பதால் அங்கு தயாரிக்கும் உணவை கிருமிகள் எளிதாக தாக்கக் கூடும். அதை உட்கொள்ளும் மக்களுக்கும் நோய்தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.
எனவே இதையெல்லாம் கருத்தில் கொண்டு, உணவு பாதுகாப்பு ஆணையம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சென்னையில் முறையான உரிமம் பெறாத பதினைந்தாயிரம் உணவகங்கள், தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் விடுதிகள் மூடப்படும் என தெரிவித்துள்ளது.