அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக அதனை ஏற்றுக்கொள்ளாமல் தங்கள் கட்சியின் தேசிய தலைமை தான் முதல்வர் வேட்பாளரை முடிவு செய்யும் என்று கூறி வருகிறது
எடப்பாடி பழனிச்சாமி அவர்களை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளாத கட்சிகள் கூட்டணிக்கு தேவையில்லை என அதிமுக தரப்பிலிருந்து ஆவேசமாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் கேபி முனுசாமி அவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். தேசிய கட்சிகளை வேரூன்ற தமிழக மக்கள் ஒருபோதும் விட மாட்டார்கள் என்று பாஜகவை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்
இந்த நிலையில் இன்று தமிழக முதல்வரை தமிழக பாஜக தலைவர் முருகன் அவர்கள் சந்திக்க உள்ளார் இன்று மதியம் ஒரு மணிக்கு நடைபெறும் இந்த சந்திப்பில் அதிமுக பாஜக இடையே உள்ள முதல்வர் வேட்பாளர் மற்றும் கூட்டணி தொடர்பான பிரச்சனைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும் முதல்வர் வேட்பாளர் விஷயத்தில் அதிமுக தனது நிலையில் உறுதியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன