தமிழகத்தில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதியுடன் முடிவடைவதை அடுத்து நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை செய்தார்
சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்பட முக்கிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை செய்த பின் இன்று அவர் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
வரும் 14ஆம் தேதி முதல் நீடிக்கப்படும் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக டீக்கடைகள் சலூன் கடைகள் அழகு நிலையங்கள் ஆகியவை திறக்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆனால் அவர்களுக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது
அதேபோல் மால்கள் உள்ளிட்ட பெரிய கடைகள் திறக்கவும் நிபந்தனைகளுடன் அனுமதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல் தொற்று குறைந்த மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கவும் இன்று அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த மாதம் இருந்ததைவிட தற்போது பாதியாக குறைந்து உள்ளதால் மேலும் சில தவறுகளை முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது