கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் வரம்பு உயர்த்தப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி அவர்கள் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்
கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் வரம்பு ரூபாய் 10 லட்சமாக தற்போது இருந்து வரும் நிலையில் அது 15 லட்சமாக உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
அதேபோல் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டி விகிதம் தற்போது 12% என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில் அது ஐந்து சதவீதம் குறைக்கப்பட்டு இனி 7% ஆக மாற்றப்படும் என்றும் அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்
இந்த இரண்டு அறிவிப்பு கூட்டுறவு வங்கி பயனாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கூட்டுறவு வங்கியில் கடன் வாங்குபவர்கள் எப்படியும் இந்த கடன் தள்ளுபடி ஆகிவிடும் என்று கட்டாமல் இருக்கின்றார்கள் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றன