மதுரையில் ஆபத்தான நிலையில் இருக்கும் 200 பள்ளிக்கட்டிடங்களை இடிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளிக் கட்டிடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தது தமிழகம் எங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவர்கள் சரியாக பராமரிக்கப் படாதலேயே கட்டிடம் விழுந்ததாக அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் ஒப்பந்தக்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் இன்று அதிகாலை முதலே அதிரடி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் அந்த சம்பவத்தின் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வந்த 200 பள்ளிக்கூட கட்டிடங்களை உடனே இடித்து அகற்ற மதுரை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.