Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கலர் அப்பளம், வத்தல் சாப்பிட்டால் கேன்சர்?

கலர் அப்பளம், வத்தல் சாப்பிட்டால் கேன்சர்?
, செவ்வாய், 17 மே 2022 (13:04 IST)
கலர் அப்பளம் மற்றும் வத்தல் சாப்பிட்டால் கேன்சர் வரும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

 
கலர் கலராக விற்கப்படும் அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்படுவதால் அவற்றை உட்கொள்ளும் போது அல்சர், கேன்சர் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
முன்னதாக நிறம் சேர்க்கப்பட்ட அப்பளம், வடகம், வத்தலின் தரத்தை ஆய்வு செய்ய உணவு பாதுகப்புத்துறை உத்தரவிட்டது. மேலும், இவைகளில் மக்கள், குழந்தைகளை கவரும் வகையில் அனுமதித்ததை விட அதிகமாக அனுமதிக்கப்படாத நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், நிறம் சேர்த்த வடகம், வத்தல், அப்பளத்தை உண்பதால் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரித்தது.
 
அதிகாரி சதிஷ்குமார் இது குறித்து கூறியதாவது, அப்பளம், வடகம், வத்தல் ஆகியவற்றில் அனுமதிக்கப்படாத நிறமிகள் சேர்க்கப்படுவதால், அவற்றை உட்கொள்வோருக்கு அல்சர், கேன்சர் போன்ற உடல்நலக்குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது. 
 
எனவே அப்பளம் சாப்பிட ஆசைப்பட்டால் கலர் இல்லாத அப்பளம் சாப்பிடலாம் என கூறியவர் மேலும், அஜிணோமோட்டோவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"இலங்கை மனித உரிமை மீறல்களை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் மேஜிக் செய்து மாற்ற முடியாது" - அம்பிகா சற்குணநாதன்