சலுகை கொடுக்கப்பட்டது உண்மை ; அறிக்கை தாக்கல் ; தொடர் சிக்கலில் சசிகலா
, திங்கள், 13 நவம்பர் 2017 (13:02 IST)
சிறையில் சசிகலாவிற்கு சலுகைகள் கொடுக்கப்பட்டது உண்மை என கர்நாடக அரசிடம் விசாரணைக்குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
சிறையில் சசிகலா மற்றும் இளவரசிக்கு அளிக்கப்பட்ட சலுகைகள் தொடர்பாக பல உண்மைகளை டிஐஜி ரூபா வெளியே கொண்டுவந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சிறையில் ஆய்வு நடத்திய அவர் சசிகலாவிற்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததும், அவருக்கு அங்க சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டிருப்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக டி.ஜி.பி சத்தியநாராயணராவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் அளிக்கப்பட்டதாகவும் அவர் புகர் கூறினார். இதனையடுத்து அவர் போக்குவரத்துதுறை அதிகாரியாக மாற்றப்பட்டார்.
மேலும், இதுபற்றி விசாரிக்க விசாரணைக் குழு ஒன்றையும் கர்நாடக அரசு அமைத்தது. அந்நிலையில், அந்த விசாரணைக்குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. அதில் சிறையில் சசிகலாவிற்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது மற்றும் சிறையில் நடந்த பல முறைகேடுகள் பற்றியும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது எனவும், இது தொடர்பான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஏற்கனவே வருமான வரிச் சோதனைகள் மூலம் கதி கலங்கிப் போயுள்ள சசிகலா, இந்த முறைகேடு புகாரிலும் சிக்கியதால் அவரும், அவரின் உறவினர்களும் அதிர்ச்சியடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்