Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

திமுகவை விட்டு விலகி செல்லும் காங்கிரஸ்!? – தனித்து போட்டியிட திட்டம்

திமுகவை விட்டு விலகி செல்லும் காங்கிரஸ்!? – தனித்து போட்டியிட திட்டம்
, வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (17:41 IST)
தமிழகத்தில் காங்கிரஸின் நிலை குறித்து செயற்குழு கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரிக் கூட்டணி இல்லாமல் வெற்றிபெறுவது குறித்து விவாதித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்திய அளவில் காங்கிரஸ் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் பலமான தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து அதன் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகினார். இது நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. தற்போது சோனியா காந்தி தற்காலிக காங்கிரஸ் தலைவராய் நீடித்து வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்திலும் காங்கிரஸ் பலமான வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மக்களவை தேர்தலில் திமுகவோடு கூட்டணி வைத்து வெற்றி பெற்றாலும் அது திமுகவின் வெற்றியாகதான் பார்க்கப்படுகிறது. மேலும் ப.சிதம்பரம் போன்ற தமிழக காங்கிரஸ் தலைவர்களின் கைதால் நிலைமை இன்னும் சிக்கலாகியுள்ளது. இந்நிலையில் நாங்குநேரி இடைத்தேர்தலும் நெருங்கி வர இருக்கிறது.

தற்போது காங்கிரஸுக்கு தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இதனால் இதுகுறித்த செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி. அதில் நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதற்கான சாதக, பாதகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

அப்போது பேசிய கே.எஸ்.அழகிரி “இத்தனை வருடங்களாக தமிழகத்தில் காங்கிரஸ் தமிழகத்தில் இருந்தாலும் தனித்து தேர்தலை சந்திக்க முடியாதது ஏன்? மற்ற கட்சிகளை போல் காங்கிரஸ் கட்சிக்கு சரியான கட்டுபாடுகள் இல்லை. எதிர்வரும் தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றிபெற்றால் மட்டுமே காங்கிரஸை மறுகட்டமைப்பு செய்ய முடியும்” என்று பேசியுள்ளார்.

ஏற்கனவே திமுக, காங்கிரஸ் இடையே கூட்டணி பூசல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட நிலையில் தற்போது காங்கிரஸ் செயற்கூட்டத்தில் தனித்து போட்டியிடுவது குறித்து பேசியிருப்பது அதை உறுதி செய்வது போல் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் நாங்குநேரி இடைத்தேர்தலை காங்கிரஸ் தனியாக சந்திக்க போகிறதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சந்திரயான் 2: 'சாஃப்ட் லேண்டிங்' - கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியமானது