தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் தவணையாக ரூ.2,000 அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்காக டோக்கன்கள் வழங்கப்பட்டது.
மே 15 முதல் டோக்கனுக்கு நிவாரணம் வழங்கும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி இன்று தொடங்கியது. கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் ரூ.2,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் உணவுத்துறை அமைச்சர். ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் நிவாரண தொகை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.