உலகெங்கும் கொரொனா பரவலைத் தடுக்கும் விதமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உலகளவில் கொரோனாவால் அனைத்து தொழில்களும் முடக்கப்பட்டு மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இன்னும் எத்தனை நாளுக்கு இப்படி இருக்க வேண்டுமோ தெரியாது என்ற பதற்றத்தில் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் குவிக்கின்றனர். இதில் காண்டமும் அடக்கம். கொரோனா பரவாமல் இருக்க, முகமூடிகள் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் மற்றும் சமூக ரீதியான விலக்கம் ஆகியவற்றைப் பல நாடுகளும் பரிந்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் சாக்கு மூட்டையை மாஸ்க்காக பயன்படுத்திக் கொண்டும், வேப்பிலையை முகத்தில் கட்டிக்கொண்டும் கொரோனா நம்மைத் தாக்காது என தில்லாக சுற்றி வருகின்றனர் சிலர். இது சம்மந்தமாக சில புகைப்படங்கள் வைரலாகப் பரவி வருகின்றன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு