திரை அரங்குகளில் அதிகாலை காட்சி அனுமதிக்கப்படுவது எந்த விதியின் அடிப்படையில் என தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அதிகாலை காட்சி குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விக்னேஷ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தமிழ்நாடு திரையரங்குகள் ஒழுங்குமுறை சட்டத்தின் படி அதிகாலை ஒரு மணி முதல் காலை 9 மணி வரை காட்சிகள் திரையிட கூடாது என்று இருக்கிறது
ஆனால் அதையும் மீறி அதற்கு முன்பாக திரையிடப்படுகிறது. இது குறித்து விசாரணை நடத்தி சிறப்புக் காட்சிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதிகாலை காட்சிகளை எந்த விதியின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கும் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது