செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீது ஜூன் 14ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பணியாற்றிய வங்கி அதிகாரிகளின் விவரங்களை வழங்க கோரிய மனுக்கள் மீது ஜூன் 14ம் தேதி உத்தரவு பிறப்பிக்க இருப்பதாகவும், அதேபோல் அமலாக்கத்துறையால் தங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களில் ஒரு சில ஆவணங்கள் திருத்தபட்டுள்ளது என செந்தில் பாலாஜி தரப்பு தாக்கல் செய்த மனுமீதும் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக சட்ட விரோத பணம் பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகளால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் கடந்த ஒரு ஆண்டுகளாக அவர் சிறையில் உள்ளார் என்பதும் அவர் அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தேர்தல் முடிந்து மத்தியில் ஆட்சி மாறவில்லை என்பதால் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? இந்த வழக்குகளில் இருந்து அவர் வெளியே வருவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.