தமிழக அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்திய நிலையில் அந்த இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி மீது அறப்போர் என்ற இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வீடியோக்களையும் இணையதளங்களில் பதிவு செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் தன்னுடைய பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் அறப்போர் இயக்கம் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது என்று கூறி அமைச்சர் வேலுமணி சார்பில் அவதூறு வழக்கு ஒன்று தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றபோது இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.அமைச்சர் எஸ் பி வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து பேச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்கவில்லை என்று கூறி அறப்போர் இயக்கம் மீது அமைச்சர் வேலுமணி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் அமைச்சர் எஸ்பி வேலுமணி அறப்போர் இயக்கத்திற்கு எதிராக இந்த வழக்கை தொடர்ந்து உள்ளதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்