விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியை பாஜகவின் B டீம் என திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், மத்திய அரசை "ஒன்றிய அரசு" என்று கூறும் விஜய், எப்படி B டீம் என்று சொல்லலாம் என்று எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் நிருபர்களை சந்தித்த போது, ராஜா, புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்த நண்பர் விஜய் சில தீர்மானங்களை இயற்றியுள்ளார். அந்த தீர்மானங்களை பார்க்கும்போது, அவர் திமுகவில் போய் சேர்ந்து கொள்ளலாம் என்பதுபோல உள்ளது. திமுக சொன்னதையே அவர் சொல்கிறார்.
நீட் தேர்வு வேண்டாம் என்று கூறும் விஜய், நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சிதான் என்பதை அறிவாரா? 2013 ஆம் ஆண்டு முதல் முறையாக நீட் தேர்வு நடந்தது யார்? ஜெயலலிதா ஒரு வருடம் நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டார்; இரண்டாவது ஆண்டும் விலக்கு கேட்ட போது, சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர், சுப்ரீம் கோர்ட் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
மத்திய அரசை "ஒன்றிய அரசு" என்று கூறும் விஜய் எப்படி பாஜகவின் B டீம் ஆனார்? முதலில் "சீமானை B டீம் என கூறியவர்கள்", இப்போது விஜய்யை B டீம் என கூறுகிறார்கள். இன்னும் எத்தனை அரசியல் கட்சிகளை B டீம் என கூறுவார்கள்?