கடலூரில் பாழடைந்த பழைய பங்களா ஒன்றிலிருந்து அருகிலிருந்த வீடுகள் மீது கற்கள் விழுந்த சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் முதுநகர் பென்சனர் லைன் தெருவில் பாழடைந்த பழைய பங்களா ஒன்று நெடுநாட்களாக பூட்டி கிடந்துள்ளது. இந்நிலையில் சமீப சில காலமாக அந்த பங்களாவிலிருந்து இரவு நேரங்களில் மற்ற வீடுகள் மீது கற்கள் விழுந்துள்ளது. இதுதொடர்பாக மக்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
பழைய பங்களாவுக்குள் ஆசாமிகள் யாரேனும் பதுங்கி இருக்க கூடும் என்று எண்ணிய போலீஸார் பங்களா கதவை உடைத்து உள்ளே சென்று சோதித்துள்ளனர். ஆனால் அங்கும் யாரும் இல்லை. யாரும் இருந்ததற்கான எந்த அடையாளமும் காணப்படவில்லை.
அதன்பிறகு மக்கள் குங்குமம், மஞ்சள் தடவிய கல் ஒன்றை பங்களாவிற்குள் வீசியுள்ளனர். ஆனால் அந்த கல்லும் திரும்ப வந்து மக்களிடம் விழுந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர். பங்களாவின் உரிமையாளரை தொடர்பு கொண்ட போலீஸார் பங்களாவை புதுப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.