ஐதராபாத்தில் பெண் டாக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் பெண்கள் சங்கங்களும் எதிர்த்து குரல் கொடுத்தன. இதனையடுத்து குற்றவாளிகள் நால்வரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடலூர் அருகே ஒரு கர்ப்பிணி பெண்ணை நான்கு கயவர்கள் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் குறித்து இதுவரை எந்த அரசியல்வாதியும் குரல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
கடலூரைச் சேர்ந்த இரண்டு பெண்கள் தங்கள் கணவர்களுடன் ஒரு திரையரங்கில் திரை படம் பார்த்துக் கொண்டிருந்த போது நான்கு பேர்கள் அந்த 2 பெண்களிடம் தவறாக நடந்து உள்ளனர். இதனை அவர்களது கணவர் கண்டித்ததால் இருவரையும் அடித்து நொறுக்கிய அந்த நான்கு பேர் பின்னர் ஒரு பெண்ணை மட்டும் கடத்தி உள்ளனர்
ஐந்து மாத கர்ப்பிணி என்று கூட இரக்கப்படாமல் அவரை விடிய விடிய நான்கு பேரும் பாலியல் பலாத்காரம் செய்து தூக்கி எறிந்து உள்ளனர். இதனை அடுத்து படுகாயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரித்த போது தன்னை கடத்திய காரில் பிரபல அரசியல் கட்சியின் கொடி ஒன்று இருந்ததாகவும் வழக்கறிஞர் ஸ்டிக்கர் இருந்ததாகவும் கூறினார்
இதனையடுத்து தற்போது போலீசார் 4 குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கடலூர் கர்ப்பிணி பெண் பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் இதுவரை ஒரு அரசியல் தலைவரும் வாய்திறக்கவில்லை. ஏனெனில் காரில் இருந்த அரசியல் கட்சியின் கொடி, பிரபலஅரசியல் கட்சியின் கொடி என்பதும், தற்போது அந்த கட்சி திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது