இன்று அதிகாலை க்யூட் தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அந்த தேர்வு எழுதியவர்கள் முடிவுகளை மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
மத்திய பல்கலையில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக க்யூட் தேர்வு கடந்த ஜூலை மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆறு கட்டங்களாக சுமார் 500 நகரங்களில் நடத்தப்பட்டது.
தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்பட்ட இந்த தேர்வை பல மாணவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் க்யூட் பொது நுழைவுத் தேர்வின் முடிவுகள் நேற்று இரவு சரியாக 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை தான் தேர்வு முடிவுகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த முடிவை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வமான இணைய தளமான https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். மேலும் தேர்வர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.