Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

அரசியலுக்கு வருவேன் - ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பரபரப்புப் பேட்டி

அரசியலுக்கு வருவேன் - ஜெ.வின் அண்ணன் மகள் தீபா பரபரப்புப் பேட்டி
, சனி, 10 டிசம்பர் 2016 (13:53 IST)
மக்கள் ஏற்றுக்கொண்டால் அரசியலுக்கு வர தான் தயாராக இருப்பதாக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பரபரப்பு பேட்டியுள்ளார்.


 

 
ஜெயலலிதாவின் ரத்த சொந்த உறவான தீபாவை, போயஸ் கார்டன் உள்ளே எப்போதும் சசிகலா அனுமதித்தது இல்லை. தீபா பல முறை போயஸ் கார்டன் சென்று, தனது அத்தையை (ஜெயலலிதா) சந்திக்க முயன்றார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.
 
அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரை பார்ப்பதற்காக தீபா அப்பல்லோ சென்றார். ஆனால் அனுமதி கிடைக்கவில்லை.  
 
இறுதியில் ஜெயலலிதா மரணம் அடைந்த போது, அவருக்கு அஞ்சலி செலுத்த மட்டுமே தீபா அனுமதிக்கப்பட்டார். அதேபோல், அவரின் சகோதரர் தீபக் ஜெ.விற்கு இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்கப்பட்டார்.
 
இந்நிலையில் சமீபத்தில் தீபா ஒரு ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது “ நான் போயாஸ் கார்டனில்தான் பிறந்தேன். ஆனால் சசிகலா உள்ளே நுழைந்து எங்கள் குடும்பத்தை அங்கிருந்து வெளியேற்றினார். அனது அத்தை ரத்த சொந்தங்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டதற்கு அவரை சுற்றியிருந்த மோசமான நபர்கள்தான் காரணம். 
 
என் அத்தை உடல் நலம் பாதிக்கப்பட்டபோது அவருக்கு உரிய பராமரிப்பு கிடைக்கவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி வெளியே தகவல் கொடுக்கப்படவில்லை.
 
அவரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த போதும் என்னை அனுமதிக்காமல் அவமானப்படுத்தினர். மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வருவதற்கு தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலா பேனரை தூக்குங்க - அதிமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் (வீடியோ)