வெறியாட்டம் ஆடிய காவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மனித உரிமை ஆணையம் உறுதி அளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்தது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தினர்.
பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கினர்.
காவல் துறையினரின் திடீா் தடியடி சம்பவத்தால், சென்னையின் சில இடங்களில் அசாம்பாவிதங்கள் நடைபெற்றன. நடுக்குப்பத்தின் சில பகுதிகளில் வாகனங்கள், கடைகள் தீக்கிரையாகின.
இந்த சம்பவத்தில், காவல் துறையினரே வாகனங்களுக்கு தீவைத்தும், சேதப்படுத்தியும், பெண்களை தகாத வார்த்தையால் திட்டியதும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இது குறித்து தமிழக மாநில மனித உரிமை ஆணையம் இன்று காவல் ஆணையாளர் ஜார்ஜ் அவர்களை விசாரணை செய்தது.
அதன் பிறகு மனித பின்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”காவலர்கள் தாக்குதலால் பாதிப்படைந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் புகார் கொடுக்க முன்வர வேண்டும் என்றும் அவ்வாறு கொடுத்தால் வெறியாட்டம் ஆடிய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பாதிப்படைந்த மாணவர்கள் தனது புகாரை கடிதம் மூலமாகவும் அனுப்பலாம்..
முகவரி:
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்,
பசுமை வழிச்சாலை,
அடையாறு
சென்னை - 600 020