Death toll rises to 10 in Delhi
சிஏஏக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடந்த நிலையில், சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே கலவரம் முண்டது. இதில், இன்று வரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த வருடம் மத்திய பாஜக அரசு இந்திய குடியரசு திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. அப்போது முதலாக நாட்டில் பல்வேறு மாநிலங்களில் பலரும் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற 2 செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். கடுமையாக காயம் அடைந்த அவர்கள், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை சிஏஏவுக்கு ஆதரவானவர்களுக்கும், எதிரானவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தடுக்க வந்த காவலர்கள் மீது போராட்டக்காரர்கள் தண்ணீரை ஊற்றியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லியில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்ட வன்முறையில் 11 எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது காவல்துறை. வன்முறையில் காயமடைந்த 150 பேர் டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.