Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

’’கைக்குட்டை, துப்பட்டாவை’’ முகக்கவசமாகப் பயன்படுத்தலாம் – சுகாதார செயலாளர்

’’கைக்குட்டை, துப்பட்டாவை’’ முகக்கவசமாகப் பயன்படுத்தலாம் – சுகாதார செயலாளர்
, புதன், 15 ஏப்ரல் 2020 (13:50 IST)
நாடு முழுவதும் நேற்று வரை 21 நாட்கள் கொரோனா பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு  உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து மேலும் 19 நாட்கள்  நீட்டித்து மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது .

இந்நிலையில் இரண்டாம் கட்ட ஊரடங்கை மாவட்ட நிர்வாகங்கள் கடுமையான விதிமுறைகளோடு செயல்படுத்த தொடங்கியுள்ளன.

சென்னையில் மாஸ்க் அணியாமல் வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ள நிலையில், மாஸ்க் அணியாமல் சென்ற பாதசாரிகளிடம் ரூ.100  பராதமும், வாகனங்களில் வந்தால் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 மாதங்களுக்கு ஓட்டுனர் உரிமம் இடை நிறுத்தம் செய்யப்படும்.  சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதேபோல சேலம் மாவட்டத்தில் மாஸ்க் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் சில மாவட்டங்கள் பல்வேறு நடவடிக்கைகளை கடுமையாக்கி வருகின்றன.

இந்நிலையில், முகக் கவசம் எனப்படும் மாஸ்க் மட்டும்தான் அணிந்து வெளியே வர வேண்டுமா என்ற  கேள்வி பலருக்கும் இருந்த நிலையில், தற்போது சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ், கைக்குட்டை, துப்பட்டா துண்டு ஆகியவற்றை முகக் கவசமாகப் பயன்படுத்ததலாம் என தெரிவித்துள்ளார்.

மேலும், கைகுட்டை , துப்பட்டா, துண்டு, ஆகியவற்றை முகக் கவசமாகப் பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்.எல்.ஏவிடமிருந்து பரவியதா கொரோனா? – தனிப்படுத்திக்கொண்ட முதல்வர்!