தமிழக மக்களின் உணர்ச்சிகளோடு விளையாடும் ரஜினிகாந்த் ஒரு மனநோயாளி என இயக்குனர் களஞ்சியம் காட்டமாக பேசியுள்ளார்.
ரஜினிகாந்திடம் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்கப்பட்டதற்கு, எந்த ஏழு பேர் என எதிர்கேள்வி கேட்டார். பின்னர் ராஜிவ் கொலை வழக்கு என தெளியபடுத்தப்பட்ட பின்னர் எனக்கு தெரியலைங்க, நான் இப்பத்தான் வருகிறேன் என மழுப்பல் பதில் அளித்தார்.
இதனை சமாளிக்க நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, செய்தியாளர் என்னிடம் ஒழுங்காக கேள்வியே கேட்கவில்லை. தெளிவாக கேள்வி கேட்டிருந்தால் நான் பதில் கூறியிருப்பேன் என பதிலளித்தார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் விடுதலை குறித்து தெரியாத அளவிற்கு இந்த ரஜினிகாந்த முட்டாள் இல்லை என வீரவசனம் பேசினார்.
இதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி குறித்து பல சூட்சும கருத்துக்களை தெரிவித்தார் ரஜினி. ரஜினியின் இந்த கருத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் களஞ்சியம் ரஜினிக்கு கூடங்குளத்த பத்தி தெரியாது, ஸ்டெர்லைட்ட பத்தி தெரியாது, 7 தமிழர்களின் விடுதலை குறித்து தெரியாது ஆனால் தமிழக மக்களை ஆள மட்டும் தெரியும். இப்பேற்பட்ட ஆட்களை மக்கள் துரத்த வேண்டும். நேரத்திற்கு நேரம் மாற்றி பேசும் ரஜினி ஒரு நல்ல மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்று பல காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார் களஞ்சியம்.