புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இந்த திறப்பு விழாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த நிலையில் திமுகவும் இந்த புதிய பாராளுமன்ற விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் முடிவடைந்து வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி அவர்களால் திறந்து வைக்கப்பட உள்ளது. இந்த கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என எதிர்கட்சிகள் போர் கொடி தூக்கியுள்ள நிலையில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்கட்சிகள் திறப்பு விழாவை புறக்கணிக்க போவதாக அறிவித்தன
இந்த நிலையில் தற்போது புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை திமுகவும் புறக்கணிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறிப்பு திமுக எம்பி திருச்சி சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் மே 28 நடைபெற உள்ள நாடாளுமன்றத் தொகுப்பு விழாவை புறக்கணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.