Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

கருணாநிதியின் வைர விழா தொடங்கியது: முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் குவிந்தனர்!

கருணாநிதியின் வைர விழா தொடங்கியது: முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் குவிந்தனர்!

கருணாநிதியின் வைர விழா தொடங்கியது: முக்கிய தலைவர்கள், தொண்டர்கள் குவிந்தனர்!
, சனி, 3 ஜூன் 2017 (17:36 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் விழாவும், சட்டசபை வைர விழாவும் இன்று திமுகாவால் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு முக்கியமான தலைவர்கள் வருகைபுரிந்துள்ளனர்.


 
 
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவர்கள் அனுமதிகாததால் விழா நாயகர் கருணாநிதி இந்த விழாவில் பங்கேற்க முடியவில்லை. இந்த இருபெரும் விழாவை சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சட்டசபையை போன்ற மேடை அமைத்து கொண்டாடுகின்றனர் திமுகவினர்.
 
சரியாக 5.30 மணிக்கு இந்த விழா தொடங்கியது. இந்த விழாவுக்கு திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் தலைமை வகிக்கிறார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விழாவுக்கு முன்னிலை வகிக்கிறார். முதன்மைச் செயலாளர் துரை முருகன் வரவேற்புரையாற்றுகிறார். இறுதியாக திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் நன்றியுரையாற்றுகிறார்.
 
இந்த விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஜம்மூ காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் டெரிக் ஓபராயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வருகைபுரிந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கட்டுக்கடங்காத திமுக தொண்டர்களும் ஒய்எம்சிஏ மைதானத்தில் குவிந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என போஸ்ட் செய்த 15 வயது சிறுவன் கைது