Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
मंगलवार, 15 अक्टूबर 2024
webdunia
Advertiesment

பண்ருட்டியில் நகர மன்ற தேர்தல் விவகாரத்தில் திமுக உட்கட்சி பூசல்.....

பண்ருட்டியில்  நகர மன்ற தேர்தல் விவகாரத்தில் திமுக உட்கட்சி பூசல்.....
, செவ்வாய், 8 மார்ச் 2022 (21:49 IST)
பண்ருட்டியில் நகர மன்ற தேர்தல் விவகாரத்தில் திமுக உட்கட்சி பூசலால் தொடரும் பதற்றம் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை . 
 
நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் 24. வார்டுகளை திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கைப்பற்றியது இந்நிலையில் நகராட்சியின் நகர மன்ற தலைவராக திமுக தலைமை கழகம் திமுக நகர மன்ற உறுப்பினர் சிவா என்பவரை அறிவித்திருந்த நிலையில் நடைபெற்ற நகரமன்றத் தலைவர் மறைமுக தேர்தலில் திமுக தலைமை கழகம் அறிவித்த சிவா 16 வாக்குகளைப் பெற்றும் அவரை எதிர்த்து திமுக நகர கழக செயலாளர்  ராஜேந்திரன் சுயேச்சையாக போட்டியிட்டு 17 வாக்குகள் பெற்று ஒரு வாக்கு வித்தியாசத்தில் நகர மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

. திமுக தலைமையிலான போட்டியிட்டு 24.வார்டு உறுப்பினர்கள் இருந்த நிலையில் திமுக தலைமை கழகம் அறிவித்த சிவா 16 வாக்குகள் பெற்ற நிலையில் , திமுக நகர கழக செயலாளர் ராஜேந்திரன் எப்படி 17 வாக்குகள் பெற்றார் என்று கேள்வி எழுந்துள்ளது  நகர கழக செயலாளர் ராஜேந்திரன் திமுக தலைமைக் கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையிலும் அதிமுக ஆதரவுடன் முறைகேடாக நகர்மன்றத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டதாக கூறி திமுக நகர மன்ற இரண்டாவது வார்டு உறுப்பினர் சிவா மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் அவர்கள் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னை வந்து பார்க்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் திமுக தலைமை கழகம் அறிவித்த நகர மன்ற தலைவராக அறிவித்த சிவா அவர்களின் ஆதரவாளர்கள் பண்ருட்டி நகரம் முழுவதும்  நகர கழக செயலாளர் ராஜேந்திரன் நகர மன்ற தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் திமுக தலைமை கழகம் நகர கழகம் நகர செயலாளர் ராஜேந்திரனை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சுவரொட்டிகளை ஒட்டியதால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதைதொடர்ந்து நகர கழக செயலாளர் ராஜேந்திரன் அவர்களின் ஆதரவாளர்கள் சுவரொட்டிகளை கிழித்து சிவா  ஆதரவாளர்களுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது இதனால் பண்ருட்டி பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படுவதற்கு முன்பு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திமுக தலைமை கழகம் அறிவித்தது போல திமுக இரண்டாவது வார்டு உறுப்பினர் சிவாவை நகரமன்றத் தலைவராக அறிவிக்க வேண்டும் என்றும் உடனடியாக இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் . 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்க தேதி அறிவிப்பு