பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடந்து வருகிறது.
1949 ஆம் ஆண்டு திமுக என்ற கட்சியை தொடங்கி 18 ஆண்டுகளில் 1967 பெருவாரியாக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சவரானவர் பேரறிஞர் அண்ணா. அதன் பின்னர் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளை தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வரமுடியாத சூழலை உருவாக்கிச் சென்ற அண்ணா ஆட்சியில் இருந்தது இரண்டே ஆண்டுகள்தான். ஆனால் தமிழகத்தின் சிறந்த முதல்வரகளில் ஒருவராக கருதப்படும் அண்ணாதான் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியவர்.
புற்றுநோய் காரணமாக 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆம் தேதி அண்ணா உயிரிழந்தார். இன்று அவரது 52 ஆவது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்துக்கு அமைதிப் பேரணி நடந்து வருகிறது.