பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுடன் தொலைபேசியில் பேசியதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
நேற்று வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அரசாணை வெளியானதை அடுத்து இன்றுமுதல் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்த நடவடிக்கை அமலுக்கு வந்தது பொறியியல் படிப்பு உள்பட அனைத்து படிப்புகளிலும் வேலைவாய்ப்புகளிலும் இனி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து நன்றி தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுடன் தொலைபேசியில் பேசியதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினேன். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை செயல்படுத்த ஆணையிட்டதற்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டேன்