மதுரை ரயில் நிலையத்துக்கு குடிநீர் பாட்டில்கள் ஏற்றிவந்த லாரியில் ரூ. 7 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்ததை போலீஸார் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பூபதி, செங்கல்பட்டு மாவட்ட்த்தில் இருந்து மதுரை ரயில் நிலையத்துக்கு குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய கொண்டுவந்துள்ளார்.
மதுரைக்கு வந்ததும், தண்ணீர் பாட்டில்களை லோடுமேஞ்கள் இறக்கியபோது, ஒரு 200 ரூபாய் நோட்டுக்கட்டுகள் கீழே விழுந்தது. அதையத்து லாரி ஒட்டுநர் போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.
அதையடுத்து, அங்கு விரைந்து சென்ற போலீஸார், வாகனத்தை ஆய்வு செய்தபோது ரூ. 7லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. . மேலும் இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்னர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது