அமைச்சர் செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மனு குறித்த தீர்ப்பு இன்று வெளியான நிலையில் அதில் ஒரு நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் என்றும் இன்னொரு நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதம் இல்லை என்றும் தீர்ப்பளித்தனர்
இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பளித்ததை அடுத்து தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் மூன்றாவது நீதிபதி இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்குவார் என்றும் கூறப்பட்டது
இந்த நிலையில் செந்தில் பாலாஜி வழக்கு குறித்த தீர்ப்பு குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வரும்போது அமைச்சர் துரைமுருகன் இது குறித்து கேட்கப்பட்டது.
அப்போது அவர் என்னுடைய துறை சம்பந்தப்பட்ட கேள்விகள் முடிந்து விட்டது தானே, ஆள விடுங்க என்று பதில் அளித்துவிட்டு விரைந்து விட்டார்.