2021 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர் கே.சி.கருப்பணன்.
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட விவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அமைச்சர்கள் இருவருடனும் திடீர் ஆலோசனைகளில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கே.சி.கருப்பணன் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, 2021 சட்டமன்ற தேர்தல் மட்டுமல்ல எடப்பாடி பழனிசாமி இருக்கும் வரை அவர்தான் முதல்வர். முதல்வர் வேட்பாளரை அறிவித்ததில் எந்த சிக்கலும் இல்லை. 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில் நேர்மையும், திறமையானவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டார்.