திமுக ஆட்சியில் மக்கள் வேதனையுடன் உள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த 100 பேர் அதிமுகவில் இணைந்த விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது தமிழ்நாடு அரசு மிகவும் மெத்தனமாக இருப்பதால் மக்கள் வேதனையுடன் இருப்பதாகவும் திமுக ஆட்சி வந்த பிறகு எந்த பெரிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்
அதிமுக ஆட்சியில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டு வந்தோம் என்றும் சட்ட கல்லூரிகளில் கொண்டு வந்தோம் என்றும் ஆனால் திமுக பெரிதாக என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்றும் கேள்வி எழுப்பினார்
திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பொறுப்பேற்றதும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் கூறினார் என்றும் ஆனால் நீட் தேர்வை ரத்து செய்தார்களா? அதற்காக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார்களா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்