மாணவ, மாணவிகளுக்கு உடல் பரிசோதனை செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளின் உடல்நலம் குறித்த தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்களை ஆசிரியர்களும் மாணவிகளை ஆசிரியர்களும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்து உள்ளது. மாணவ மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவையான சிகிச்சை அளிக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வி துறையின் இந்த உத்தரவை அடுத்து சில நாட்களில் மாணவ மாணவிககளின் உடல் நலம் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.