பருவ விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆண்டுதோறும் பள்ளி பாடங்கள், தேர்வுகள் என திரியும் மாணவர்களுக்கு ஓய்வளிப்பது பருவ கால விடுமுறைகளே! அரையாண்டு தேர்வு முடியும் சமயம் கிறிஸ்துமஸ், புத்தாண்டை சேர்த்து மாணவர்களுக்கு 10 நாட்கள் வரை இரண்டாம் பருவ விடுமுறை வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த பருவ விடுமுறையிலும் பல பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வர சொல்வதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்துவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இதனால் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ள தொடக்க கல்வி இயக்ககம் டிசம்பர் 24 முதல் ஜனவரி 2 வரை அறிவிக்கப்பட்டபடி மாணவர்களுக்கு பருவ விடுமுறை ஆகும். அவர்களுக்கு இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் அந்த பள்ளிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
தொடக்க கல்வி இயக்ககத்தின் இந்த அறிவிப்பால் விடுமுறை நாட்களை முழுதாக கொண்டாடலாம் என்ற மகிழ்ச்சியில் மாணவர்கள் இருப்பதாக தெரிகிறது.