தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ஒரு மாணவர் மற்றும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்த 19 வயது சுபஸ்ரீ என்ற மாணவி நீட் தேர்வு பயம் காரணமாக தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் தேனியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் ஆன்லைன் பாடங்கள் புரியாததால் பெற்றோர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்
நேற்று ஒரே நாளில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருத்து கூறிய திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அரசே கல்வி கொலைகளை செய்து வருவதாக கூறியுள்ளார். அவர் மேலும் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
நீட் குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை! சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்!