தற்போது உள்ள சூழ்நிலையில் இன்ஜினியரிங் படித்த மாணவர்களுக்கு பெரும்பாலும் வேலை கிடைக்கவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாக இருந்து வருகிறது.
ஆனால், இந்த குற்றச்சாட்டு ஒரு படிக்கு மேல் சென்று பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஓராண்டில் 22,000 மேற்பட்ட பேராசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.
ஆம், பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால் கடந்த 2018 ஆம் ஆண்டில் 22,256 பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் வேலை இழந்துள்ளனர். இதனால் ஏற்கெனவே மோசமாக உள்ள கல்லூரிகள் மேலும் தரம் தாழ்ந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொறியியல் கல்லூரி பேராசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரை மட்டுமே மாத சம்பளம் அளிக்கப்படுகிறது என புகார் நிலவுகிறது.