தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்வதால் கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே
தற்போது ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஏழாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த ஊரடங்கிலும் இபாஸ் முறை அமலில் உள்ளது என்பதும் தெரிந்ததே
தமிழகத்தில் இபாஸ் முறை அமல்படுத்தப்பட்ட உள்ளதால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனை இபாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
எனவே தமிழக அரசு இதனை பரிசீலித்து இபாஸ் நடைமுறையை ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சற்று முன்னர் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அவர்கள் அறிவித்த அறிவிப்பு ஒன்றில் தமிழகத்தில் இபாஸ் நடைமுறை தொடரும் என்றும் ஆனால் அதே சமயத்தில் இபாஸ் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை களைய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்
இபாஸ் நடைமுறை தொடரும் என்று தலைமைச் செயலாளர் அறிவிப்பு செய்து உள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்