தமிழக சட்டசபை தேர்தலின் வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் வாக்குகள் பதிவான வாக்குப் பதிவு இயந்திரங்கள் தற்போது பல அடுக்கு பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன
நேற்று பதிவான வாக்குகள் மே இரண்டாம் தேதி எண்ணப்பட உள்ளன என்பதும் அதுவரை இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைக்கப்படும் அதற்கு உண்டான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் செய்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
வாக்குகள் பதிவாகி உள்ள எந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள அறை பூட்டி சீல் வைக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த அறையை சுற்றி 3 அடுக்கு பாதுகாப்பு மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
மேலும் தமிழ்நாடு காவல் துறையினரும் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருவார்கள் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை உள்பட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கொண்டு கண்காணிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.